Salient Features
Questions and Previous Years’ Solved Papers are provided for Practice.
Scholarships & Other Benefits (Refer : Chapter-V of Terms & Conditions)
Regular Online Topic-wise Test which are followed by discussion.
JAM | CUET-PG | GATE | NET | TRB Online Test Series.
The Classes will be held approximately 2 to 3 hours daily for around Six months.
Weekly | Monthly report for Each Student
Fees can be paid in Two installments. (10% Offer for Single Installment)
Second installment must be paid on or before one month from the date of course commencement.
இவைகளை பற்றிய மேலும் விபரங்களுக்கு அத்தியாயம் - V, Terms & Conditions யை காணவும்.
Batch | Admission Duration | Course Duration |
Batch: I | December 01 to 25 | 1- January to 30-June |
Batch : II | June 01 to 25 | 1- July to 30-December |
CSIR-NET | GATE | JAM | CUET-PG | SET | TRB தேர்வுகளின் வேதியியல் பாடத்துக்கான வகுப்புகள் தகுதிவாய்ந்த, தேர்ச்சி பெற்ற, அனுபவமுள்ள ஆசிரியர்கள் மூலம் திறம்பட நடத்தப்படுகிறது.
தொகுப்பு (Batch)-I :
இதற்கான மாணவர்சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சனவரி 1 முதல் சூன் 30-ஆம் தேதி வரை வகுப்பு நடைபெறும்.
தொகுப்பு (Batch)-II :
இதற்கான மாணவர்சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சூலை 1 முதல் திசம்பர் 30-ஆம் தேதி வரை வகுப்பு நடைபெறும்.
எனினும் மாணவர்கள் 6 மாத காலத்திற்கு பிறகு விதிமுறைகள் & நிபந்தனைகளின் விதி எண் 5-ன் கீழ் அடுத்த 6 மாதங்கள் எந்த ஒரு கட்டணமும் இன்றி வகுப்பை தொடரலாம்.
மேலும் எங்களது வகுப்பு கீழ்காணும் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது,
|
|
CSIR-NET | SET | GATE | JAM | CUET-PG | TRB ஆகிய தேர்வுகளுக்கான வேதியியல் பயிற்சிக்கு ஒருங்கிணைந்த சேர்க்கை விண்ணப்பம் Forms பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான சரியான Category-ஐ தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
- மாணவர்கள் தங்கள் கல்விக்கட்டணத்தை இரண்டு தவணையாக செலுத்தலாம். இரண்டாவது தவணையை தொகுப்பு (Batch) தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
- எனினும், கல்விக்கட்டணத்தை ஒரே தவணையாக UPI மூலம் செலுத்தினால் 10% கழித்துக்கொள்ளப்படும்.
- விதி எண்-3ன் கீழ் வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் 6 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும்.
- எனினும் விதி எண்-5ன் கீழ் எந்தஒரு கட்டணமும் இன்றி அடுத்த 6 மாத காலம் வகுப்பை தொடரலாம்.
- AJ Chem கல்விச்சாலையின் Study Material கடந்த 25 ஆண்டுகளாக வேதியியல் பாடத்தில் நடத்தப்பட்ட கீழ்காணும் தேர்வுகளிலிருந்து கிடைக்கப்பட்ட 16,115 வினாக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
- இந்த Study Material-ஐ Soft copy-ஆகவோ அல்லது Hard copy-ஆகவோ வழங்குவதில் எந்தப்பயனும் இல்லை. ஏனெனில் 90% மாணவர்கள் இதை பெற்று தங்கள் வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைப்பதோடுசரி, தேர்வுக்கு முன்பு, ஏதோ கல்லூரி பருவத்தேர்வுக்கு படிப்பதுபோல் மனப்பாடம் செய்கிறார்கள்.
- ஆனால், CSIR-NET | GATE | JAM | SET | CUET-PG | BARC | TRB ஆகியதேர்வுகள் மாணவர்கள் எந்தளவுக்கு வேதியியலை நன்கு உணர்ந்து அதிலிருந்து கேட்கப்படும் புதிய-புதிய வினாக்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் படித்திருக்கிறார்கள் என்பதை சோதிப்பதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
- மேலும், நீங்கள் மனப்பாடம் செய்து எழுதுவதற்கு இங்கு Descriptive/Subjective வடிவில் எந்தக்கேள்வியும் கேட்கப்படுவதில்லை.
- ஆகவே, இந்த Study Material-ன் எந்த ஒரு பகுதியும் Soft copy-ஆகவோ அல்லது Hard copy-ஆகவோ எந்தஒரு மாணவருக்கும் வழங்கப்படுவதில்லை.
- இந்த Study Material-ன் ஒவ்வொரு பக்கமும் ஆசிரியரால் தெளிவாக வகுப்பிலேயே வாசிப்பதன் மூலம் மாணவர்களை தங்கள் பாடப்புத்தகத்தில் எழுதவைத்து, பின்பு முழுமையாக விளக்கப்படுவதோடு அவற்றிலிருந்து இதுநாள் வரை எந்தெந்த தேர்வுகளில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது, அதேபோல வரும் காலங்களில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்படலாம், மாணவர்கள் இதை எவ்வாறு படிக்கவேண்டும், போன்ற அனைத்து விவரங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- இதனால் மாணவர்கள் அன்றைய வகுப்பை அன்றைக்கே புரிந்துகொள்ள முடியும். பின்பு அன்றைய வகுப்பில் மாணவர்களின் புரிதலை சோதிப்பதற்கு குறைந்தது 10 வினாக்கள் அடங்கிய வகுப்பு தேர்வு ஒன்று நடத்தப்படும்.
தேர்வின் பெயர் | காலம் | மொத்த வினாத்தாள்கள் | மொத்த வினாக்கள் |
JAM | 2005 - 2024 | 20 வினாத்தாள்கள் | 1040 வினாக்கள் |
GATE | 2000 - 2024 | 25 வினாத்தாள்கள் | 1375 வினாக்கள் |
CUET-PG | 2021 - 2024 | 4 வினாத்தாள்கள் | 300 வினாக்கள் |
CSIR-NET | 2011 - 2023 | 25 வினாத்தாள்கள் | 2800 வினாக்கள் |
Polytechnic TRB | 2018 - 2021 | 2 வினாத்தாள்கள் | 300 வினாக்கள் |
PG-TRB | 2001 - 2022 | 10 வினாத்தாள்கள் | 1500 வினாக்கள் |
SET (various States) | 2002 - 2024 | 88 வினாத்தாள்கள் | 8800 வினாக்கள் |
மொத்தம் | 174 வினாத்தாள்கள் | 16,115 வினாக்கள் |
- தற்போது வரை இதுவரை நடைபெற்ற CSIR-NET | GATE | JAM | CUET-PG தேர்வுகளின் 74-வினாத்தாள்கள் Online Test-ஆக AJ Chem கல்விச்சாலையின் அதிகாரபூர்வ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Test Series கடந்த 25 ஆண்டுகளாக வேதியியல் பாடத்தில் நடத்தப்பட்ட CSIR-NET | GATE | JAM | SET | CUET-PG | TRB தேர்வுகளிலிருந்து கிடைக்கப்பட்ட 16,115 வினாக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
- இவை மொத்தம் 30 Unit-களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு Unit-க்கும் தலா 10 தேர்வுகள் முறையே மொத்தம் 300 தேர்வுகள் நடத்தப்படும்.
- ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 50 வினாக்கள் முறையே மொத்தம் 15,000 வினாக்கள்.
- இவைதவிர கூடுதலாக 600 Concept wise தேர்வுகளும் நடத்தப்படும்.
- ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு இணைய-வகுப்பறை (Online Classroom) வீதம் உருவாக்கப்படும். அந்தந்த மாதத்திற்கான வகுப்பறை நுழைவு அடையாள எண் (classroom ID) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அந்த மாதம் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு Teachmint Tution App-ன் அறிவிப்பு பலகை (Notice Board) மூலமாக வழங்கப்படும்.
- எனினும் தொகுப்பின் (Batch) முதல் மாதத்திற்கான வகுப்பறை நுழைவு அடையாள எண் மட்டும் தங்களுக்கு கட்செவியஞ்சல்(whatsApp) மூலம் வழங்கப்படும்.
- Teachmint Tution App-ன் மூலமாக தங்களுக்கு இணையவழி வகுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் இணையவழி நேரலை வகுப்பு முடிந்ததும், "Teachmint Tution App-ன்" Recordings பகுதியில் வகுப்பு முடிந்து அடுத்த 2 மணிநேரத்திற்குள் அன்றைய வகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும், இந்த பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் பார்வையிடலாம். ஆனால் இந்தச் சிறப்புரிமை அதன் காலாவதி தேதி முடியும் வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். (மேலும் விபரங்களுக்கு விதிமுறைகள் & நிபந்தனைகளின் விதி எண் 14-ஐ பார்க்கவும்).
- மேலும் "Teachmint Tution App-ஐ எவ்வாறு பயன்படுத்துவது, அதில் எவ்வாறு இணையவழி நேரலை வகுப்பில் இணைவது போன்ற விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "Teachmint Tution App pdf link- மூலம் தெரிந்துகொள்ளலாம். Click here to know more details about Teachmint Tuition App
- மாணவர்கள் கட்டணத்தை(Fee) இரண்டு தவணையாக செலுத்தலாம். இரண்டாவது தவணையை தொகுப்பு (Batch) தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
- எனினும் கட்டணத்தை ஒரே தவணையாக UPI மூலம் செலுத்தினால் மட்டுமே 10% கல்விக்கட்டணச் சலுகையை பெறயியலும்.
- உணவு மற்றும் தங்கும் விடுதிக்காக மாணவர்கள் மாதம் ரூபாய் 4,000 - 4,500 செலுத்த வேண்டும்.
Teachmint Tution App-ன் மூலமாக தங்களுக்கு இணையவழி வகுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் இணையவழி நேரலை வகுப்பு முடிந்ததும், "Teachmint Tution App-ன்" Recordings பகுதியில், வகுப்பு முடிந்து அடுத்த 2 மணிநேரத்திற்குள் அன்றைய வகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும், இந்த பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் பார்வையிடலாம். ஆனால், இந்தச் சிறப்புரிமை அதன் காலாவதி தேதி முடியும் வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். (மேலும் விபரங்களுக்கு விதிமுறைகள் & நிபந்தனைகளின் விதி எண் 14-ஐ பார்க்கவும்).
- மாணவர்கள் வகுப்பின்போதோ அல்லது வகுப்பு முடிந்தபின்போ "Teachmint Tuition App"-ல் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
- மாணவர்கள் ஆசிரியர்களிடம் வகுப்பு சம்பந்தமான எந்தஒரு சந்தேகத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம். இணையவழி வகுப்பு நடைபெறும் பொழுது "Teachmint Tuition App"-ல் உள்ள "mic"-ஐ unmute செய்து மாணவர்கள் தங்களது ஆக்கபூர்வமான சந்தேகங்களை கேட்கலாம் அல்லது வகுப்பு முடிந்தவுடன் "Teachmint Tuition App-ல் உள்ள chat box மூலம் நேரடியாக உரிய ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்கலாம்.
- எனினும் குரல் செய்தி(Voice Message) மூலம் சந்தேகங்களை கேட்கக்கூடாது.
- வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒரு பயனர் அடையாள எண் (User ID) வழங்கப்படும். இந்த எண் மட்டுமே வகுப்பறையிலும் தங்களது வார அறிக்கையிலும் (weekly Report) பயன்படுத்தப்படும். தங்களது பயனர் எண் தவிர தங்களது பெயர், வயது, பணி மற்றும் பாலினம் போன்ற எந்த தகவலும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பகிரப்படாது. இதன்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
- மாணவர்கள் வகுப்பின்போதோ அல்லது வகுப்பு முடிந்தபின்போ "Teachmint Tuition App"-ல் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
- தங்களுக்கு பயனர் அடையாள எண் வழங்கப்படுவதன் மூலம் தங்களது பெயர், வயது, பணி மற்றும் பாலினம் ஆகியவை மற்ற மாணவர்களால் எளிதாக அடையாளம் காண இயலாது. இதன்மூலம் தங்களது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.
- மாணவர்கள் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும், அதற்கு முந்தைய வாரத்தில் என்னென்ன கற்றுக்கொண்டோம், என்னென்ன வகுப்புகள் நடத்தப்பட்டது போன்றவற்றை தெரிந்துகொள்ள இங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களது வார அறிக்கையை மாணவர்களுக்கு வெளியிடுகின்றனர்.
- அதேபோல மாணவர்கள் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும், அதற்கு முந்தைய வாரத்தில் தாங்கள் எந்தளவு நேரலை வகுப்பில் இணைந்தோம், என்னென்ன வகுப்புதேர்வுகள் எழுதினோம், வீட்டுப்பாடங்கள் மற்றும் வகுப்பு உரையாடல்களில் எந்தளவு ஒழுங்குமுறையோடு இருந்தோம் போன்றவற்றை தெரிந்துகொள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே வார அறிக்கை வழங்கப்படுகிறது.
- இந்த மாணவர்-வார அறிக்கை மூலம் மாணவர்கள் தன்னைத்தானே ஆய்வு செய்துகொள்ள உதவுவதோடு, தங்களின் கடந்தகால தவறுகளை வருங்காலங்களில் திருத்திக்கொள்ள பேருதவியாக அமைகிறது.
- மேலும் மாணவர்-வார அறிக்கையை அடிப்படையாக கொண்டு அத்தியாயம்-Vன் கீழ் சலுகையை பெறலாம்.
- மாணவர்கள் தினந்தோறும் நேரலை வகுப்புகளில் கலந்துகொள்வது, வகுப்புத்தேர்வுகளை தொடர்ந்து பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் வழங்கும் சிறுசிறு வீட்டுப்பாடங்களிலும் சிறந்து விளங்கினால், தங்களது இலட்சிய தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் குறைந்தகால பயிற்சியில் வெற்றிபெறலாம்.
- ஆகவே, இங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களாலும் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது ஒரு வீட்டுப்பாடமாவது வழங்கப்படும்.
- வீட்டுப்பாடங்களை அந்தந்த ஆசிரியருக்கு வகுப்பு முடிந்ததிலிருந்து அடுத்த 10 மணிநேரத்திற்குள் Teachmint Tuition App-ன் Chat Box வழியாக அனுப்பவேண்டும்.